ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இடையூறு! வெளியான காரணம்
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தொடக்கம் ஒருவார காலத்திற்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணி
இந்நிலையில் கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல வேலைகளையும் எவ்வித பிரச்சினையுமின்றி மேற்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னதாக இணக்கம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நேற்றும் மற்றும் இன்றும் அனைத்து கடமைகளில் இருந்தும் விலகிக் கொள்வதுடன், நாடு தழுவிய ரீதியில் ஒரு வார காலப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam