கடமையை நிறைவேற்ற தவறிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்
கடுவளை நீதவான் இல்லத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடமையை சரிவர நிறைவேற்ற தவறியமைக்காக இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அன்றிரவு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி வழமை போன்று பாதுகாப்பு வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிபதிகள் அல்லது நீதிமன்றங்களின் பாதுகாப்பை நீக்கவோ அல்லது குறைக்கவோ தாம் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
| அனைத்து நீதிபதிகளின் பாதுகாப்பையும் உடனடியாக பலப்படுத்த பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் பணிப்புரை (Photos) |
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam