நாட்டில் பல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெருமளவான சிறுவர்கள்
அரச பல் அறுவை சிகிச்சை சங்கத்தின் கூற்றுப்படி, இலங்கை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 96வீதமானோர் பல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு பல் அறுவை சிகிச்சை சங்கத்தின் செயலாளர் மஞ்சுளா ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
பல் நோய்களால் பாதிப்பு
15 வயது குழந்தைகளில் 85 வீதமானோரும், 12 வயது குழந்தைகளில் 79 வீதமானோரும் பேர் பல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பல் பிரச்சினைகள் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளிடையே பரவலாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாய்வழி ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசு பல் அறுவை சிகிச்சை சங்கத்தின் செயலாளர் மஞ்சுளா ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |