கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கையில் அதிகரித்த நோய் தாக்கம் : விவசாயிகள் கவலை
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதுடன் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருபத்தி இரண்டாயிரத்து 781.25 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நோய்த்தாக்கங்கள்
இதில் குடமுருட்டி குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 330 ஏக்கர் நெற்செய்கை முழுமையாக இம்மாத இறுதிக்குள் அறுவடை செய்யக்கூடிய நிலையில் சிறுபோக செய்கையில் பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அதாவது நெல் வயல்களில் தத்தி, மடிச்சுக்கட்டி, இலை சுருட்டி போன்ற நோய்களின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

கடந்த கால போகத்திலும் இவ்வாறான நோய் தாக்கம் காரணமாக பெரும் அழிவுகளை சந்தித்த விவசாயிகள் இம்முறை சிறுபோகத்திலாவது ஓரளவு விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த போதும் இவ்வாறு நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam