சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் ஜ.நா சபை பிரதிநிதியுடன் கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல், இன்று(26.03.2026) யாழ் பொஸ்ட் விடுதியில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசியல் நிலைப்பாடு
இதன்போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சம கால அரசியல் நிலைப்பாடுகள், எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் சமகால அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தர்சன் மற்றும் சமத்துவக் கட்சி தலைவர் சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.