கிளிநொச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கியுள்ள உறுதி
கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமாரகம, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் விளையாட்டு கழகங்களில் தலைவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் நேரடி கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களில் பல்வேறு குறைபாடுகளில் இருப்பதாகவும், தமது குறைபாடுகளை இன்றையதினம் கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சரிடம் நேரடியாக கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் போது விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள், செயலாளர், விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்கள் தாம் விளையாட்டுத்துறையில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
கோரிக்கை
இதற்கு பதிலளித்த விளையாட்டுதுறை அமைச்சர், கழகங்களில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இருப்பதாகவும், அதற்கான நிதியும் தம்மிடம் கையிருப்பில் உள்ளதாகவும், உங்கள் விளையாட்டு கழகங்களுக்கு தேவைப்படுகின்ற தேவைப்பாடுகள் தொடர்பாக அறிக்கைகளை தருமாறு கேட்டுக்கொண்டார்.
அத்துடன் கிளிநொச்சி மாவட்ட பொது விளையாட்டு மைதான கட்டடத் தொகுதியில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை விரைவாக தரும் பொழுது தம்மால் நிதியை பெற்றுத் தர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



