மன்னாரில் கடலட்டை பிடிப்போருக்கான அனுமதி தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)
மன்னார், கோந்தைப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் இறங்குதுறை தொடர்பாகவும், மன்னாரில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களுக்கான அனுமதிகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று (15.11.2023) கடற்தொழில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது, “மன்னார்- கோந்தைப்பிட்டி இறங்குதுறைப் பகுதியில் அமைந்துள்ள இறங்குதுறை தொடர்பில் கலந்துரையாடினோம்.
உரிய நடவடிக்கைகள்
இதனையடுத்து கடற்றொழிலாளர்கள் தடைகளின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்.
மன்னாரில் கடலட்டை பிடிப்பவர்களுக்கான அனுமதி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. கடலட்டை பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனுமதி தொடர்பாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |