கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுடன் விசேட கலந்துரையாடல் (Video)
தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுடனனான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று(30.06.2023) மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது றூபவதி கேதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பாக மாணவர்களுக்கு தற்போது ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்களிருந்து மீண்டு வருவதற்கு அறநெறி கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.
வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் அறநெறி பாடசாலைகளிலும் சமய செயற்பாடுகளிலும் ஈடுபடும் பொருட்டாக தனியார் கல்வி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அதேவேளை ஞாயிறு தினங்களில் 12 மணிக்கு முன் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது எனவும் அறிவித்திருந்தோம்.
அது தொடர்பாக பல கல்வி நிறுவனங்களிடம் அறிவிக்கப்பட்டிருக்கையில் அவற்றில் சில நிறுவனங்கள் அந்த செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஒரு சில கல்வி நிறுவனங்கள் அந்த செயற்பாடுகளை முன்னெடுக்காமலிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் கல்வி நிலையங்களில் 63 கல்வி நிலையங்கள் பிரதேச சபைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 53 கல்வி நிலையங்கள் பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் 113 தனியார் கல்விநிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின்போது, மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், பொலிஸார், சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |