யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல்
யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலானது நேற்று (3) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலாத் துறை
இதன்போது, இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் முதலீட்டு பிரிவின் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக தலைவர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் (காணி), இந்திய முதலீட்டாளர் குழு, காணி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் உட்பட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய விடய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

அமெரிக்காவின் அதிர்ச்சி முடிவு: உக்ரைனுக்கான ஆயுத உதவி நிறுத்தம்! ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு தொடருமா? News Lankasri
