வெளிநாடொன்றில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை மீட்க நடவடிக்கை
மியன்மாரில் சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, மியன்மார் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
4வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மர் சென்றிருந்த வேளையில் மியான்மர் பிரதமர் மின் ஆங் ஹ்லைங்கை அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு செயலாளர் சந்தித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கையர்களை மீட்பதற்கு உதவுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மியன்மார் இதன்போது பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றப்பிரதேசம்
மியன்மாரில் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ‘Cyber Criminal Area’ எனப்படுகின்ற சைபர் குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற இடத்தில் இலங்கையின் 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரதேசம் முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |