தமிழர் தாயகத்தின் எழுச்சிப் பேரணி குறித்து கலந்துரையாடல் (Video)
வடக்கில் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் முன்னெடுக்கப்படும் கருப்பு சுதந்திர தின எழுச்சிப் பேரணியை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் (03.02.2023) மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளை கண்டித்தும், இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை வலியுறுத்தியும், வடகிழக்கு இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள கருப்பு சுதந்திர தின எழுச்சிப் பேரணி குறித்தே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கில் நாளைய தினம் (04.02.2023) ஆரம்பமாகும் இந்த எழுச்சி பேரணியானது, கிழக்கில் 7ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், அதனை கிழக்கு மாகாணத்தில் எழுச்சியான வகையில் வரவேற்பது குறித்து கலந்துரையாடப்பட்டவுடன் இந்த போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மக்கள் அணிதிரள வேண்டும்...
குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam