வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் குறித்த கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சிரேஷ்ட பொருளியியலாளர் அந்தோனி ஒபயசேகர கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
ஆளுநர் செயலகத்தில் இன்று (05.02.2025) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்திலிருந்து போருக்கு முன்னர் பெருமளவு மரக்கறிகள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் போரின் பின்னர் அவ்வாறான செயற்பாடுகள் முழுமையாக நடைபெறவில்லை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் வேலையின்மை
அத்துடன் போருக்கு முன்னர் சிமெந்து தொழிற்சாலை, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் இயங்கினாலும் போரின் பின்னர் அவை முழுவீச்சில் இயங்கவில்லை என்றும் இதனால் வடக்கில் வேலையின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பில் உலக வங்கிப் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் உலக வங்கிப் பிரதிநிதிகள் அவதானம் செலுத்தினர்.
சுற்றுலாத்துறைசார் முதலீட்டுக்கு பலர் தயாராக உள்ளபோதும் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
வடக்குக்கான பயண நேரம்
மேலும், கொழும்பிலிருந்து வடக்குக்கான பயண நேரம் நீண்டதாகக் காணப்படுகின்றமையால் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்புத் தொடர்பிலும் உலக வங்கிப் பிரதிநிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.
இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் அரச காணிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குடிநீர் மிகப் பிரதான பிரச்சினையாக இருப்பதாகவும் குறிப்பிட்ட ஆளுநர் 2018 – 2019 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் உலக வங்கியின் நிதியுதவியில் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருந்த மிகப்பெரிய திட்டங்கள் துரதிஷ்டவசமாக நடைமுறைப்படுத்தப்படாமல் போனமை தொடர்பிலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |