கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை, கிழக்கு மாகாணத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவசியமான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த விசேட கலந்துரையாடல் திருவண்ணாமலை ஆளுநர் அலுவலகத்தில், நேற்று(01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
விசேட கலந்துரையாடல்
இதில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம உட்பட, கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண துறைசார்ந்த அரச திணைக்களத் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், மாகாண சபையால் செயல்படுத்தப்படும் போது ஏற்படுகின்ற இடையூறுகள், பிரச்சினைகள் என்பன இனங்காணப்பட்டு, அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமாவது குறித்தும், அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.



மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan