இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதர் செமி லுட்ஃபு துர்குட் உடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது , இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பல்வேறு துறைகளில் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதி அமைச்சரின் சமீபத்திய துருக்கி பயணத்தின்போது ஆறு துறைகளில் உயர் மட்ட அரசியல் உறவுகளை மீண்டும் செயல்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில், அப்பயணத்தின்போது கையொப்பமிடப்பட்ட இரண்டு இருதரப்பு ஒப்பந்தங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
தேவையான நடவடிக்கை
மேலும், தற்போது நிலுவையில் உள்ள மற்ற இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

பொருளாதார முன்னணியில், மாறிவரும் உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு மத்தியில், துருக்கிக்கான இலங்கை தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சியை இரு தரப்பினரும் ஆய்வு செய்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தைப் பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் வணிக-வணிகப் பரிமாற்றத் திட்டங்களை ஊக்குவிப்பது குறித்தும்ம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
முதலீட்டு வாய்ப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்புகளையும் கலாச்சார உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அத்துடன், இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதற்காக துருக்கிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகளும் எடுத்துரைக்கப்பட்டன.

கலாச்சார சுற்றுலா மற்றும் தொல்பொருள் தளங்களைப் பாதுகாத்தல் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகள் உள்ளதையும் இரு தரப்பினரும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
2027 வரவு - செலவுத் திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஏமாற்றுத் திட்டமே! ஜனாதிபதியைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்