வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம்(JICA) தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் பிரதம பிரதிநிதி கென்ஜி குரோனுமாவுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று(21.01.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்போதே மேற்கண்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சந்திப்பின் போது, ஜெய்க்கா நிறுவனம் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார்.
கழிவு முகாமைத்துவம்
மாகாணத்தின் தற்போதைய தேவைகள் குறித்துப் பேசிய ஆளுநர், கழிவு முகாமைத்துவத்தில் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றது. அதனை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளிலும் மேம்பாடுகள் அவசியமாகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜெய்க்கா நிறுவனத்தின் பிரதம பிரதிநிதி கென்ஜி குரோனுமா, இலங்கையில் தான் பொறுப்பேற்ற பின்னர் வடக்கு மாகாணத்துக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். வடக்கு முதலீட்டு உச்சி மா நாட்டில் பங்கேற்பதற்காக இங்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, எமது புதிய திட்டங்கள் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் வீசிய டிட்வா புயல் அனர்த்தத்தால் வடக்கின் சுகாதாரத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அவர் கேட்டறிந்து கொண்டதுடன்,வடக்கில் முதலீட்டாளர்களுக்கான அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுவதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam