மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல்
மன்னார் (Mannar) திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (19) திருக்கேதீஸ்வர ஆலய சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
மேலும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலட்சக்கணக்கான மக்கள்
இதன்போது எதிர்வரும் 26 ஆம் திகதி (26.02.2025) இடம்பெற உள்ள மகா சிவராத்திரி விழாவிற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கடந்த வருடங்களை போன்று இம்முறையும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து ஒழுங்குகள், சுகாதாரம், மின்சாரம், நீர் விநியோகம், உணவு, பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் உள்ளடங்கலாக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
