கிளிநொச்சியில் நீர்ப்பாசன பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி குளம் மற்றும் கனகாம்பிகை குளம் ஆகிய குளங்களின் நீரேந்தல் பகுதிகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த கலந்துரையாடலில் குள ஒதுக்கப் பகுதிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், நில எல்லை நிர்ணயம், மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
விசேட கலந்துரையாடல்
அதிலும் குறிப்பாக, நீர்ப்பாசன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோணங்களில் குளப்பரப்புகளை பாதுகாக்க தேவையான நடைமுறைகள் பற்றியும் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதி நிலஅளவை நாயகம் வடமாகாணம், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
குளப் பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


