ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசன் தான நிகழ்ச்சி குறித்த இந்த கலந்துரையாடல் நேற்று (08) நடைபெற்றுள்ளது.
பொசன் தான நிகழ்ச்சி
இதன்போது சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளில் நடைபெறவிருக்கும் பொசன் தான நிகழ்ச்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, குறித்த நிகழ்விற்காக விகாரைகளுக்கு வருகைத்தரும் பக்தர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாராதிபதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக கதிர்காமத்திலிருந்து சிதுல்பவ்வ வரையிலான வீதியை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிதுபவ்வ விகாராதிபதி லேல்வல சமித தேரர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.