மன்னாரில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்(( PSTA) ) தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது.
மன்னாரில் குறித்த கலந்துரையாடல் இன்று (17.1.2026) வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது.
அதன் போது 'தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக முன்மொழியப்பட்ட ( PSTA) பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் புதிய சட்டமாக வர உள்ளது.
விமர்சனங்கள்
இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பரந்த வரையறைகள் மற்றும் கடுமையான பிரிவுகள் காரணமாக இது பொது மக்களின் போராட்டங்கள் ,சிவில் சமூக செயற்பாடுகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினரை குறிவைக்க கூடும்' என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், இலங்கை குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள். சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களும் பாதிக்கப்படலாம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கலந்துரையாடலில் வளவாளராக சட்டத்தரணி எஸ்.டினேசன் கலந்து கொண்டதுடன் பங்குபெற்றாளர்களாக உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,உறுப்பினர்கள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் கடற் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ,ஊடகவியலாளர்கள், மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது கலந்து கொண்டவர்கள் இந்த நாட்டில் இச்சட்டம் தேவை இல்லை என்பதையும்,தாம் இச்சட்டத்தை அமுல் படுத்தும் நோக்கத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.



சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan