யாழில் பிரஜா சக்தி குழுவின் முதல் கலந்துரையாடல்
யாழ் வடமராட்சி கிழக்கு முள்ளியான் (J433) மற்றும் கேவில்,போக்கறுப்பு(J434) கிராம அலுவலர் பிரிவின் பிரஜாசக்தி குழுவின் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(26.02.2026) பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் கட்டைக்காட்டில் அமைந்துள்ள முள்ளியான் கிராம அலுவலர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நியமன கடிதம் வழங்கி வைப்பு
இதன்போது உள்ளக வீதி புனரமைப்பு,விவசாய ஊக்குவிப்புகள்,வைத்தியசாலை மேம்படுத்தல்,மாணவர்களுக்கான கருத்தரங்குகள்,பாடசாலைக்கான குடிநீர் வசதிகள்,விளையாட்டு மைதானம்,கல்வி, மின்சாரம், போன்ற இன்னும் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கேவில்,போக்கறுப்பு(j434) பகுதி பிரஜா சக்தி குழு கலந்துரையாடலும் இடம்பெற்றதுடன் அப்பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறிப்பாக விளையாட்டு மைதானம், உள்ளக வீதிகள், கல்வி, விவசாயம், மின்சாரம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் இறுதியில் பிரஜாசக்தி குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கலந்துரையாடலில் கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்,பிரஜா சக்தி தலைவர்கள்,பிரஜா சக்தியின் ஆலோசனைக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான உதயபாஸ்கரன்,பிரஜா சக்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam