ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் இன்று கட்சியின் தலைமையகமான தாருஸ் தலாமில் நடைபெற்றுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடு பூராகவும் கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்வருகின்ற தேர்தல்களில் கட்சியின் நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
விரைவில் உயர் பீட உறுப்பினர்களை ஒன்றிணைத்து கட்சி புனரமைப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
