கெரவலபிட்டிய மின்நிலைய ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் கலந்துரையாடல்
கெரவலபிட்டியிலுள்ள 310 மெகாவாட் யுகதனவி மின் நிலையத்தின் உரிமையாளர் வெஸ்ட் கோஸ்ட் பவர் லிமிடெட் (WCP)-யில் முதலீடு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவை தளமாகக்கொண்ட நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடலுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இந்த விவகாரம் குறித்து முதலில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் விவாதிக்குமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி செப்டெம்பர் 23 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, யுகதானவி மின்நிலையத்தின் செயல்பாட்டால் சாத்தியமான நுகர்வோர் நன்மைகளைப் பற்றி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு விளக்கினார்.
அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அரசாங்கத்துடன் தொடர்புடைய 11 அரசியல் கட்சிகள் இன்று மாலை மின் நிலைய ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துகின்றன.
