ரணில் தலைமையில் காலையில் முக்கிய கலந்துரையாடல்
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (22.09.2024) காலையில் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரகாரம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிச் செல்ல முன்பதாக ரணில் விக்ரமசிங்க தலைமையேற்கும் கடைசிக் கலந்துரையாடலாக இந்தக் கலந்துரையாடல் அமைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் அரசியல் மாற்றத்தை சுமுகமான முறையில் கையளிப்பதில் நாட்டம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று காலை வரையான தேர்தல் முடிவுகளைப் பொறுத்து ஜனாதிபதி பதவியில் இருந்து பதவி விலகல் செய்து விட்டு ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தும் வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தனிப்பட்ட பணியாட் தொகுதி
அதற்கு முன்னோடியாக தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாட் தொகுதியினரை கலைக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri