காணாமல் போனோர் அலுவலகத்தினால் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நேற்று(29.10.2024) காலை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களான தியாகராஜா யோகராஜா, அர்பா தாசிம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஆக்கப்பட்டோரின் உறவுகள்
இந்நிலையில், ஏனைய மாவட்டங்களிலும் இது போன்ற கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எந்த நேரமும் தங்களின் முறைப்பாடுகளை எமது ஐந்து பிராந்திய நிலையங்கள் ஊடாக முன்வைக்க முடியும் என தியாகராஜா யோகராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை 21000விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 15000வரையான விண்ணப்பங்களுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், 6500முறைப்பாடுகளுக்கு பூர்வாங்க விசாரணை நடைபெற்று அதற்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தியாகராஜா யோகராஜா விளக்கமளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam