மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகம் மேற்கொண்ட கலந்துரையாடல்
மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஒன்றுகூடலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளன.
இக்கலந்துரையாடலானது, நேற்றைய திளம் (21) கிளிநொச்சி கூட்டுறவாளர் சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மாவீரர் நினைவேந்தல்
இதன்போது நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில், மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர், எதிர்வரும் காலத்தில் மாவீரர் நினைவேந்தர்களை தாம் பொறுப்பு எடுத்து செய்வதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தீர்மானத்திற்கு ஏற்றவாறு தாம் நிர்வாகங்களை தேர்வு செய்து முன்னாள் போராளிகள் தலைமை தாங்கி மாவீரர் நினைவேந்தலை நடத்துவதாகவும் அதற்கு முன்னாயத்த கூட்டமாக இது நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |