ஜனாதிபதி செயலணியில் இடம்பெறாத சிறுபான்மையினத்தவர்: டக்ளஸ் வலியுறுத்து
ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத் திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில், சினுபான்மையின மக்களின் பிரதிநித்துவம் இல்லாமையை சுட்டிக்காட்டி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகத்தினால் இந்த விடயம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை அவர் வரவேற்றுள்ளார்.
சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லை
இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும் டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள 18 பேர் அடங்கிய இக்குழவில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
