மாத்தராம்ப ஹேமராதன நாயக தேரருக்கும் சுற்றாடல் அமைச்சர் நஸீருக்கும் இடையில் கலந்துரையாடல்
வரலாற்றுச் சிறப்புமிக்க சிதுல்பௌவ விகாராதிபதி மாத்தராம்ப ஹேமராதன நாயக தேரர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று (1.11.2022) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, விகாரையின் விஸ்தரிப்பு, புனருத்தாபனம் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் விகாராதிபதி அமைச்சருக்கு எடுத்துரைத்துள்ளார்.

விகாரையை விஸ்தரிக்க கோரிக்கை
வருடாந்தம் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விகாரையில் வழிபாட்டுக்காக வருகின்றதாகவும் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த விகாரையை விஸ்தரிப்பதற்கான தேவை குறித்தும் விகாராதிபதி அமைச்சருக்கு எடுத்துரைத்துள்ளார்.
இதற்கான அனுமதியை சுற்றாடல் அமைச்சு வழங்க வேண்டியுள்ளதால், ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் கோரிகை விடுத்துள்ளார்.

இந்நிலையில் விகாராதிபதியின் விடயங்களை, கருத்திலெடுத்த அமைச்சர் இதற்கான அனுமதியை தருவதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.