கானாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைகள் தொடர்பில் நீதி அமைச்சர் கலந்துகொண்ட கலந்துரையாடல்
கடந்த காலங்களில் கானாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் முன்னைய அரசியல்வாதிகள் முயற்சி எடுத்து இருந்தால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என நீதி அமைச்சர் ஹரிசன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று(19-06-2026) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காணாமல் போன ஆட்களை பதிவு செய்யும் அலுவலகமான ஓஎம்பி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
ஹர்சன நாணயக்கார
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பகல் 10 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மட்டங்களில் சேவையாற்றுகின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அரச சார்பற்ற நிறுவனங்களினுடைய பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் இந்த காணாமல் போனகள் விடயத்தில் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் முயற்சி எடுத்திருந்தால் இதற்கான தீர்வை கண்டிருக்க முடியும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் சகவாழ்வு நல்லிணக்கம் ஒற்றுமை என்பவற்றை அமைப்பதற்கு முடியாமல் போயிருக்கின்றது.
இந்த அரசாங்கம் அதற்கான முயற்சிகளை எடுக்கும் தமிழர்களை இரண்டாம் பிரஜைகளாக பார்க்கின்ற எந்த ஒரு சந்தர்ப்பங்களும் இனி இடம் அளிக்கப் போவதில்லை அனைவரையும் ஒற்றுமையுடன் பார்க்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களின் வாக்குகள்
கோட்டாபய ராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்ததாக தெரிவித்து வந்தாரே தவிர இந்த அலுவலகங்களை செயல்படுத்த விடவில்லை குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களினுடைய அழுத்தங்கள் காரணமாகவே இந்த அலுவலகங்கள் பேரளவில் ஆரம்பிக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன் இளங்குமரன் மற்றும் அமைச்சின் செயலாளர் காணாமல் போன அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்







தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam