திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ எல் எம் அதாவுல்லா, முன்னால் மாகாண சபை அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான கபில நுவான் அது கோரல்ல உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நம்பக தகமை உடைய வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு எவ்வாறு செல்வது? பாதுகாப்பு வெளிநாட்டு தொழிலுக்கான சரியான பாதை மற்றும் உங்களுக்கு பொருத்தமான வெளிநாட்டு வாய்ப்பினை எவ்வாறு பெறுவது போன்ற விடயங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
இவை அனைத்தையும் பெறுவதென்றால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து செல்வதன் மூலமே இதனை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எவ்வாறு, பயன்படுத்துவது அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என்ன பணியகத்தில் பதிவு செய்து செல்வதால் ஏற்படும் நன்மை என்ன போன்ற விடயங்கள் ஊடக வியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |