‘நீதிக்கான அணுகல்’ செயற்றிட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் (Photos)
நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ‘நீதிக்கான அணுகல்’ செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், பிரதமரின் இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் நீதி அமைச்சின் செயலாளர் பி.கே.மாயாதுன்ன,
நீதி அமைச்சின் மேலதிக செயலாளர், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான
அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பல்கலைக்கழகத்
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பல்கலைக்கழகப் பேரவையின்
உறுப்பினர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும்
மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.








மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
