வலுவிழப்புக்குள்ளானவர்களிற்கு எவ்வாறான தொழில்வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்
வலுவவிழப்புக்குள்ளான நபர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம்(9) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலானது பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, புதியவாழ்வு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அங்கிருக்கின்ற வலுவிழப்புக்கு உள்ளான நபர்களுடைய உடல் உள நலன் தொடர்பாகவும், வலுவிழந்த நபர்களுக்கு தாெழில்நுட்ப ரீதியாக எவ்வாறான தொழில்வாய்ப்புக்களை வழங்கமுடியும் என்பது தாெடர்பாகவும், இளைஞர்களுக்கான தாெழில்வாய்ப்பு தாெடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் புதியவாழ்வு நிறுவனத்தின் தலைவர் சு.துஸ்யந்தன் உப தலைவர் ப.தர்சினி, உப செயலாளர் செ.கருணாகரன் இயக்குனர் சபை உறுப்பினர்கள் நிர்வாக உறுப்பினர்கள், பிரித்தானியா அறம் Intiative அமைப்பினர், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உபதலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர், மற்றும் சமூக நலன்விரும்பிகளும் , மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மன்னார் நகர சபை தவிசாளர் தெரிவின் போது தான் தடுத்து வைக்கப்பட்டதாக மஸ்தான் கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
