கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் (Photos)
மீன்பிடி துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் மணல் முகாமைத்துவம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இன்று (23.03.2023) இடம்பெற்ற கலந்துரையாடலில் கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

நஷ்ட ஈடுகள் வழங்குதல்
கடல் மணல் அகழ்வு பணிகளால் தெற்கில் கடற்கரையோரங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஷ்ட ஈடுகள் வழங்குவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் எக்ஸ்பேர்ள் கப்பல் தீப்பரவலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடுகள் போன்ற கொடுப்பனவுகளில் காணப்படும்
தேக்க நிலைமையை விரைவாக தீர்ப்பது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அமைச்சின்
செயலாளர்கள் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் பணிப்பாளர், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொது முகாமையாளர், மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தானத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகும் ஜோடியாக சுற்றிய தீபிகா-சரவணன் இடையில் இப்படியொரு பிரச்சனையா? Cineulagam