மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேச பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல் (Video)
மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் இணைத்தலைவர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் நேற்றையதினம் (12.07.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்த ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, விளையாட்டு, கட்டுமான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதற்கான அனுமதியும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவினால் வழங்கப்பட்டது.
இது மட்டுமன்றி காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அவர்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டது.
அத்துடன் காத்தான்குடி பகுதியில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு அவைகளுக்கு உடனடி தீர்வுகளும் வழங்கப்பட்டதுடன் தீர்வுகாணப்படாத விடயங்களுக்கு உரிய திணைக்களங்கள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அரச திணைக்கள உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |