முத்துநகர் விவசாயிகளின் பிரச்சினை குறித்து பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல்!
முத்துநகர் விவசாயிகளின் விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்சினை குறித்து பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 குடும்பங்கள் தங்களது விவசாய நிலங்களை இழந்ததன் காரணமாக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் இந்த பயிர் செய்கைக்கான நெல் பயிரிடும் பணிகளும் தாமதமாகியுள்ளது. இத்தகவல் தொடர்பாக அரசாங்கத்துடன் பலமுறை கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் இதுவரை தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை.
சுமார் ஒரு ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் விவசாயிகளை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அதுவும் மேலும் தாமதமடைந்த நிலை காணப்படுகிறது.
தொடர் கோரிக்கை
இதன் காரணமாக, நேற்று (13) கொழும்பில் முத்துநகர் விவசாயிகள் பிரதமர் செயலாளர் அலுவலகத்துடன் இணைந்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அந்த சந்திப்பில் பிரதமர் அலுவலகம், இந்த பிரச்சினையில் தங்களது தலையீட்டினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தது.
மேலும், விவசாயிகள் அங்கு நிலவும் சிக்கலான சூழ்நிலையையும், சில அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்கள் பொய்யான தகவல்களை வழங்கி விவசாய நிலங்களை அபகரிக்க முயல்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினர். அதேவேளை அவர்கள் தீர்வுக்கான சில யோசனைகளையும் முன்வைத்தனர்.
இதன் விளைவாக, அடுத்த 10 நாட்களுக்குள் திருகோணமலையில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் மற்றொரு கலந்துரையாடலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முத்துநகர் விவசாயிகள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் நேற்று (13) 58 ஆம் நாளாகவும் திருகோணமலையில் இடம்பெற்றது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri