ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், இணை ஒருங்கிணைப்பாளர் சீலன், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், பொருகலியல் ஆய்வாளர் இரானியல் செல்வின், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் என்பன கலந்துக்கொண்டிருந்தன.
மேலும், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்புக்கள், வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், குரல் அற்றோர் குரல் அமைப்பு, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், இரணைமடு கமக்கார அமைப்பு, கிழக்கு தமிழ் விவசாயிகள் அமைப்பு, யாழ்ப்பாணம் வணிகர் கழகம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மயிலத்தமடு மேச்சல் தரை போராட்ட குழு, சிரேஸ்ர ஊடகவியலாளர்கள், உட்பட பொது, சமூக செயற்பாட்டாளர்கள், வண பிதாக்கள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |