யாழ்.போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களுக்கும் பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல்
யாழ்.போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களுக்கும் பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில்
நடைபெற்ற இந்த கலந்துரையாடலில்
வைத்தியசாலை செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதற்கு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனவும் கூறப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கான ஆலோசனைகள்
1. நோயாளர்களை பார்வையிடுவதற்கு பார்வையாளர் நேரத்தில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
2. நோயாளருடன் விடுதிகளில் உதவிக்காக ஒருவர் மட்டுமே தங்கி நிற்க முடியும்.
3. வைத்தியசாலை வளாகத்துக்குள் போதைப்பொருள் அல்லது மது பாவித்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
4. விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்களோ அல்லது உதவியாளர்களோ இரவு 7.30 மணிக்கு பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேற அனுமதிக்கபடமாட்டார்கள்.
5. விடுதிகளில் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடும் போது உதவியாளர்கள் விடுதியை விட்டு வெளியேறி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
6. வைத்தியசாலைக்குள் வருபவர்கள் மற்றும் வைத்தியசாலை சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
7. நோயாளரை பார்வையிடுவதற்கு குழுக்களாக வருகை தருபவர்கள் எக்காரணம் கொண்டும் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
8. வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வதற்கு பூரண ஒத்துவைப்பு வழங்க வேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam