மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல்போன நீல நிற கிளி கண்டுப்பிடிப்பு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன, நீல நிறத்திலான கிளி கிடைத்துள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.
களுபோவில பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், இந்த கிளியை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர், குறித்த கிளி பறந்து வந்துள்ளதாகவும், உரிமையாளர் எவரும் வருகைத் தராமையினால் இதுவரை தாம் அந்த கிளியை பராமரித்து வந்துள்ளதாகவும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கிளி காணாமல்போனமை குறித்து, ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த கிளி மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல்போன கிளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
