வடக்கில் தனியார் மருத்துவ நிலையத்தில் போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு
வவுனியாவிலுள்ள வைத்தியர் ஒருவர், தனியார் மருத்துவ நிலையம் ஊடாக மாதாந்தம் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மருந்து விற்பனை நிலையங்கள் மீதும் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனையின் ஈடுபட்ட போது கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மருந்து மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவ நிலையத்தின் பெயரில் மாதாந்தம் 400 பெட்டி உயிர்கொல்லி போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளார்.
போதை மாத்திரை விநியோகம்
குறித்த வைத்தியர் வவுனியாவிலுள்ள அரச மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், இவ்வளவு பெருந்தொகை போதை மாத்திரை மருத்துவ தேவைக்காக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக பலரும் சுட்டிகாட்டி வருகின்றனர்.
இளம் சமூகத்தை குறிவைக்கும் போதைப்பொருள் விற்பனை
பொறுப்பு வாய்ந்த மருத்துவர் ஒருவர் தனது மருத்துவ நிலையத்தின் ஊடாக 400 போதை மாத்திரைகளை மாதாந்தம் பெற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
யாழ். மாவட்டத்தின் இளம் சமுதாயத்தை போதைப்பாவனையில் இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையான இளைஞரொருவர் தவறான முடிவு எடுத்து நேற்று (24.10.2022) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் மேற்கு, மருதடியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்வியில் திறமையாகத் திகழ்ந்த இவர், உயர்தரத்துக்குத் தெரிவான பின்னர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலையில் இணைந்துள்ளார்.
அங்கு உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிலுள்ள பொருள்களைத் திருடுவது உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, சீர்த்திருத்தப் பாடசாலையிலும் இளைஞர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவர் கடந்த ஒரு மாத காலமாக உயிர்கொல்லி ஹெரோயினை நுகர முடியாமல் இருந்துள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாதாந்தம் ஒருவராவது இவ்வாறு உயிரிழக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையிலிருந்து மீள்வதற்கு முயற்சிப்பவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையுடனேயே அதனை முன்னெடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தி: ராகேஷ்





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
