விலைக்குறைப்பு நிலையானதாக இருக்க வேண்டும்: மக்கள் கருத்து (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள விலைக்குறைப்பு என்பது நிலையானதாக இருக்க வேண்டும் என மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (01.07.2023) ஊடகத்திற்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் தமது கருத்தினை முன்வைத்துள்ளனர்.
மேலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து எரிவாயு விலைகள் என்றுமில்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு எரிவாயுவினை குறித்த விலைக்குப் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக பலர் மண்ணெண்ணெய்க்கும், விறகு பாவனைக்கும் மாற்றம் பெற்று வருகின்றனர்.
எனினும், மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதிலும் அதன் விலை உயர்வு காரணமாகவும் மக்கள் மேலும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், தற்போது எரிவாயு விலையினை அரசாங்கம் படிப்படியாகக் குறைத்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது என பொது மக்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எரிவாயு விற்பனை கணிசமான அளவு விற்பனை குறைந்துள்ளதாகவும் தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, மேலும் விலை குறைப்பு ஏற்பட்டால் வர்த்தகம் கடந்த காலங்களில் போல் இடம்பெறும் எனவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எது எவ்வாறாயினும், ஏனைய பொருட்களின் விலைகள் மாற்றம் ஏற்படாததன் காரணமாக மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தவிப்பதாகவும் இன்னும் சிலர் தெரிவிப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |