இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத் துறையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்
நாட்டின் அனர்த்த முகாமைத்துவத் துறையை உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தரத்திலான அபிவிருத்தி
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு படையணியின் உயர்மட்ட தூதுக்குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மையத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவத் துறையை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம்.
எனவே பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவளிக்கும் உலகளாவிய பதிலளிப்பாளராக பேரிடர் முகாமைத்துவ நிலையத்தை உருவாக்க உத்தேசித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
