நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 13,627 குடும்பங்களைச் சேர்ந்த 55,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், தென் மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்கள்
அந்த அறிக்கையில் மேலும், மேல் மாகாணத்தில் 10,990 குடும்பங்களைச் சேர்ந்த 45,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் 2119 குடும்பங்களைச் சேர்ந்த 8615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
702 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 930 பேர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மண்சரிவு
இதேவேளை மாத்தறை, தியலபே, தென்னபிட்டிஹேன பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக சுமார் 30இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக, காலியில் வீடொன்றின் மீது கற்பாறை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
