பேரிடரில் வடக்கு உள்ளுராட்சி தலைவர்கள் செயற்பட்ட விதம் குறித்து அமைச்சர் பாராட்டு
நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் போது வடக்கிலுள்ள உள்ளுராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து பூரண ஆதரவை வழங்கினர் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 - குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,
வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள்
வடக்கில் அதிகமான உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள். அவர்கள் எங்களிடம் கதைத்து உதவிகளை கேட்டனர். நாங்கள் முழுமையான ஆதரவை வழங்கினோம். அடைக்கலநாதன் எம்.பி எங்களுடன் நன்றாக பேசினார். நாங்கள் எதிர்க்கட்சி என்று பிரித்து பார்க்காமல் உதவி செய்கிறோம்.

தென் மாகாணத்தில் இருந்து பலர் தாங்கள் அறியாத இடங்களுக்கு சென்று உதவி செய்கின்றனர். அவ்வாறான ஒரு சூழலை உருவாக்கியுள்ளோம்.
இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பகுதிக்கு சென்று உதவி செய்கின்றனர். நாளை அநுராதரபுரத்தில் இருந்து மன்னாருக்கு செல்லவுள்ளனர். இந்த ஒற்றுமையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இந்த சவால்களை நாம் வெற்றிக்கொள்வோம் என்றார்.