வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 பேர் பாதிப்பு (Photos)
வவுனியா வடக்கில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக வவுனியா மாவட்டத்தில் கடும் வெப்ப நிலை நீடித்து வருவதுடன், அவ்வப்போது மாலை வேளைகளில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், நேற்று(20.04.2023) மாலை வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் மழை பெய்ததால் வவுனியா மாவட்டத்தின் ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 7 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
வீடுகள் சேதம்
மேலும், சேனைப்புலவு கிராம அலுவலர் பிரிவில் கடையுடன் கூடிய வீடு ஒன்று சேதமடைந்துள்ளதுடன், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இதன்படி வவுனியா வடக்கில் மொத்தமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவித் திட்டங்கள் வழங்குவதற்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








