நாட்டில் இடம்பெறப்போகும் பேரழிவு: ஜனாதிபதிக்கு எச்சரிக்கைவிடுத்த இலங்கை வைத்திய சபை
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாட்டுக்கு உடனடி தீர்வு வழங்காவிட்டால் பேரழிவு ஏற்படும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஐந்து யோசனைகளை சுகாதார செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளது. அவைாயாவன,
1. நாட்டில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தல்,
2. தொடர்புடைய அனைத்து தரப்பினராலும் அழைக்கப்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் நிலையை மதிப்பாய்வு செய்தல்,
3. தற்போது எங்களிடம் உள்ள மருந்துகளின் சரியான நிர்வாகத்திற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க சுகாதார அமைச்சு ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைத்தல்,
4. மருந்து தட்டுப்பாட்டைச் சமாளிக்க வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஆதரவையும் சர்வதேச உதவியையும் பெறுதல்,
5. வெளிநாட்டு உதவியுடன் பெறப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்குதல்.
சுகாதார அமைச்சுக்கு போதிய நிதியுதவி வழங்குவதன் மூலம் நாட்டு மக்களுக்கு சுகாதாரத்திற்கான அடிப்படை மனித உரிமைகள் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளனர்.
மருந்துகளுக்கு பணம் செலவழிக்க முன்னுரிமை கொடுப்பது கடினம் என மத்திய
வங்கியின் புதிய ஆளுநர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri