இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக 17 பேர் உயிரிழப்பு
இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக இன்று காலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் கேகாலையை சேர்ந்த ஐந்து பேரும், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கம்பஹாவை சேர்ந்த தலா 3 பேரும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பேரைக் காணவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக 206,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 17 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 978 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சீரற்ற வானிலை, நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் சேதங்களை விளைவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
