இங்கையில் மேலும் மோசமடையும் காலநிலை: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! பலரை தேடும் பணி தீவிரம்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 10 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 17 முதல் இன்று (27) வரை, 17 மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன,
மேலும் 79 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் இன்னும் காணவில்லை என்றும் மையம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் 18 இறப்பு
இதே நேரத்தில், பேரிடர் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் காரணமாக 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் 18 இறப்புகளும், சபரகமுவ மாகாணத்தில் 7 இறப்புகளும், மத்திய மாகாணத்தில் 4 இறப்புகளும், தெற்கு மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் தலா ஒரு மரணமும் பதிவாகியுள்ளன.