இலங்கையில் தொடரும் மோசமான வானிலை! ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையம் (Disaster Management Centre - DMC) தெரிவித்துள்ளது.
இன்று (15) காலை 6 மணிக்கு தேசிய அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் மோசமடையும் காலநிலை! கைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
தற்போது 104 பேர் முகாம்களில்
மேலும், மோசமான வானிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கிடையில், இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேர் தற்போது இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால், பல ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் ஈரவலயப் பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், ஆறுகளை அண்டிய மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எல்.எஸ். சூரியபண்டார அறிவுறுத்தினார்.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam