காணாமல் போன மீனவர்களை தேடும் பணியின் இரண்டாம் நாளும் ஏமாற்றம்: சோகத்தில் உறவுகள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத இருவரையும் தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் இடம் பெற்ற போதும் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை அறியமுடிந்துள்ளது.
இன்று காலை 10 மணியிலிருந்து இதுவரை தொடர்பின்றிய இரண்டு மீனவர்களையும் தேடும் பணி இடம்பெற்றநிலையில் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கடற்றொழிலுக்குச் சென்ற யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன், என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
நேற்றைய தினம் குறித்த மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட சக மீனவர்கள் அவர்கள் தொழிலிற்குப் பயன்படுத்திய வலைகளைத் துண்டங்களாகக் காணப்பட்ட நிலையில் கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் பாரிய இயந்திர படகில் மோதுண்டு
மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமென உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
