உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் நம்பிக்கையிழப்பு : இலங்கை கத்தோலிக்க திருச்சபை
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் (Easter Attack) தொடர்பான அரசாங்க விசாரணைகளில் நம்பிக்கை இழந்துவிட்டதாக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை கூறியுள்ளதுடன் நீதிக்காக தெய்வீக உதவியை நாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று விருந்தகங்களில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் உள்ளவர்களை இலங்கை அதிகாரிகள் அம்பலப்படுத்துவார்கள் எனத் தாம் நம்பவில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
ஆவணப்பட குற்றச்சாட்டுகள்
இதுவரை, ஆட்சியில் இருப்பவர்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய எதையும் செய்யவில்லை.
தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, குண்டுவீசித் தாக்கப்பட்ட இரண்டு தேவாலயங்களில் மத வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதுடன், விசுவாசிகளின் அமைதியான அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளை தற்போதைய நிர்வாகத்தின் உயர் புலனாய்வு அதிகாரியுடன் தொடர்புபடுத்திய 2023ஆம் ஆண்டு பிரித்தானிய தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தவறவிட்டுள்ளது.
எனவே, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், குண்டுவெடிப்புகளின் முழு சூழ்நிலையையும் கண்டறிய, சர்வதேச உதவியுடன் ஒரு சுயாதீன விசாரணையை நடத்தவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
