வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கோரிய இந்த போராட்டத்திலும் சகலரும் எந்தவிதமான மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமானத்தோடு உறவுகளை தேடுகின்றவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருந்து அவர்களுக்கு வலு சேர்க்க வேண்டிய கட்டாய தார்மீக பொறுப்பு எமக்கு இருக்கின்றது என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றையதினம் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகும் இதுவரை எமது வட கிழக்கிலே எமது தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
போராட்டம்
அத்தோடு இதுவரை காலமும் உள்ளக பொறிமுறை விசாரணை என்கின்ற போர்வையில் தொடர்ந்து வருகின்ற அரசாங்கங்கள் எமது மக்களை அன்று முதல் இன்று வரை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்.
எமது உறவுகள் இருக்கின்ற வட கிழக்கிலே வாழுகின்ற அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நிம்மதியான ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று சர்வதேசத்தையும் கூறுகின்ற இந்த நிகழ்விலே அனைவரும் மதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தோடு நாம் அனைவரும் சேர்ந்து இந்த சர்வதேச நீதி விசாரணைக்கு ஒன்று திரண்டு குரல் கொடுத்து எம். மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கு முன் வரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான இந்த போராட்டத்திற்கு எங்களது முழுமையான ஆதரவையும் வழங்குவோம் என்பதனை இந்த நேரத்திலே கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.





அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri

உக்ரைன் போரை முடிக்க ஐரோப்பிய நாடுகளின் புதிய திட்டம்: Buffer Zone யோசனைக்கு ஜெலென்ஸ்கி மறுப்பு! News Lankasri
